Admin
அடிப்படையிலிந்து இலகுவாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட இக் கற்கை நெறியானது Network பிரச்சனை காரணமாக Zoom வகுப்பில் இணைந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கும், Online மூலமாக கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் இதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
ஏன் எங்களுக்கு ஆங்கிலம் கடினம்?
எவ்வாறு நாங்கள் தமிழ் மொழியினை இல்குவாக கற்றோம் என்பதை புரிந்துகொண்டால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வது மிகவும் இலகுவாக அமையும்.
1. Listening Skill
ஒரு பிள்ளை பிறந்த அடுத்த நொடியே நாங்கள் அந்த பிள்ளையுடன் கதைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் அந்த பிள்ளையால் கதைக்க முடியாது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கும். (Listening) இதுவே ஒரு மொழி படிப்பதர்குரிய முதலாவது skill
Listening Skills என்ற input இருந்தால் மாத்திரமே Speaking English என ஒரு output கிடைக்கும்.
2. Speaking Skill
இரண்டு வயதை அடைந்த உடன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியினை அழகாக உச்சரித்து மழலை மொழியில் குழந்தை பேச ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த பிள்ளைக்கு Grammar என்றால் என்ன என்றே தெரியாது.
3. Reading Skill
மூன்று வயது அடைந்த்தும் அ அம்மா, ஆ ஆடு இ இலை என தமிழி வாசிப்பினை ஆரம்பிக்கிறோம். படங்கள் மூலமாக பிள்ளை அவற்றை இலகுவில் புரிந்துகொள்கிறது.
4. Writing Skill
நான்கு வயதை அடைந்ததும் ஏடு தொடக்கி கொஞ்சம் கொஞ்சமக writing Skill இனை ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆமை வேகத்தில் நான்கு வருடங்களில் கற்றுக்கொண்ட பிள்ளையினால் இலகுவில் தாய் மொழியினை கற்றுக்கொள்ள முடிகிறது.
தாய்மொழியினை இலகுவில் கற்றுக்கொண்டது போன்று ஆங்கிலத்தையும் அடிப்படையிலிருந்து இலகுவில் கற்றுக்கொள்ள வேண்டுமாயில் Listening Skills , Speaking Skills, Reading Skills மற்றும் Writing Skills என்பவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
இக் கற்கை நெறியானது அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துக்களையும் எமக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் பணிவாக வேண்டுகிறோம்.
முதலில் Writing Skills உடன் ஆரம்பிக்கலாம்.
What you’ll learn
This course includes 9 modules, 117 lessons, and 0 hours of materials.
Reply to Comment